தமிழகத்தைமத்திய அரசு வஞ்சிப்பதை தேமுதிக ஏற்றுக்கொள்ளாது

தமிழகத்தைமத்திய அரசு வஞ்சிப்பதை தேமுதிக ஏற்றுக்கொள்ளாது
X
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதை ஒருபோதும் தேமுதிக ஏற்று கொள்ளாது தமிழக அரசுடன் இணைந்து ஆதரவு தருவோம் என கூறினார். ராஜ்ய சபா எம்பி சீட்டுக்கு உறுதிமொழி அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை பற்றிய கேள்விக்கு பதிலலிக்காமல் நன்றி என முடித்துக் கொண்டார். பிரேமலதா விஜயகாந்த்
:-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதியின் 60 வயது பூர்த்தியையொட்டி நடைபெற்ற மணி விழாவில் கலந்து கொண்டு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக அரசின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது அதன்படி அதில் கலந்து கொண்டோம். கேப்டன் அவர்களின் கொள்கைப்படி அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழிகளும் கற்போம் என்பதையே நாம் வலியுறுத்தினோம். நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளை குறைத்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது, தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக முழு ஆதரவை கொடுக்கும் என தெரிவித்தார். மேலும் தமிழக முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக தெரிவித்தார். இன்றைய தமிழக பட்ஜெட் குறித்து முழுமையான தகவல் கிடைத்த பின் தலைமை கழகத்திலிருந்து அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். ராஜ்ய சபா எம்பி சீட்டுக்கு உறுதிமொழி அளிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப்பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலலிக்காமல் நன்றி வணக்கம் என்று கூறி நழுவி சென்று விட்டார்
Next Story