மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவகம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் திட்டம் சார்பில்  சுய உதவிக்குழுக்களின் மதி சிறுதானிய உணவகத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, பார்வையிட்டார
Ll மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழுக்களின் மதி சிறுதானிய உணவகம் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் பூம்புகார் எம்எல்ஏக்கள் .நிவேதா.எம்.முருகன், எஸ்.ராஜகுமார்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிற்படுத்தப்பபட்டோர் நலத்துறைற அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மதி சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்தார். . உதயம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூலம் நடத்தப்படவுள்ள இந்த உணவகத்தில் நவதானியக் கஞ்சி, சத்துமாவுக் கஞ்சி, மதிய உணவு, பச்சைப்பயறு கஞ்சி, அவல் கட்லட், பட்டாணி சுண்டல், அவல் கொழுக்கட்டை போன்ற உடல் நலத்தினை பேணிக்காக்கும் சத்தான உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் குணசேகரன், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் எம்.செல்வராஜ், மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story