முன்னாள் தலைமைச் செயலர் சொக்கலிங்கம் நூறாவது பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் தலைமை செயலர் சொக்கலிங்கத்திற்கு நூறாவது பிறந்தநாள் விழா எடுத்த மண்ணின் மைந்தர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெரியாரிடம் நிதி பெற்று அரசு கல்லூரி அமைய வழி வகுத்தவர் அண்ணா, எம்ஜிஆர் பெரியாரிடம் பெயர் பெற்றவர் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது அவரின் தனிச் செயலராகவும் எம்.ஜிஆர் ஆட்சியில் தலைமைச் செயலாளருமாகப் பணியாற்றியவர் மங்கைநல்லூர் சொக்கலிங்கம். இன்று அவரது 100வது பிறந்தநாள் அதை முன்னிட்டு மண்ணின் மைந்தர்கள் விழாவாகக் கொண்டாடினர், கரும்பு உற்பத்தியாளர் சங்க பொறுப்பாளர் மங்கைநல்லூர ஷண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட (திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்) பெரம்பூர் ஜெயராமன், தெரிவிக்கையில், 1963 ஆம் ஆண்டு வாக்கில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மேற்படிப்பு படிக்க திருச்சியில் கல்லூரி இல்லாமல் சிரமப்படுவதாக பெரியாரிடம் புலம்பினர், அந்த நேரத்தில் திருச்சி கலெக்டராக சுறுசுறுப்பாக செயலற்றிவந்தவர், சொக்கலிங்கம். திருச்சி கலெக்டர் சொக்கலிங்கத்திடம் கோரிக்கை வையுங்கள் செய்துகொடுப்பார் என பெரியார் அறிவுறுத்தினார். அதைக் கேட்ட மாவட்ட ஆட்சியராக இருந்த சொக்கலிங்கம் ரூ.5 லட்சம் நிதியும் இடமும் இருந்தால் புதிய அரசு கல்லூரி ஆரம்பிக்க தான் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார், உடனடியாக பெரியார் ரூ-5 லட்சத்தை வழங்கினார், அரசு கலைக்கல்லூரி கட்டப்பட்டது, 1965ல் அந்த கல்லூரியை திறக்கவந்த அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பக்தவச்சலம், கல்லூரியின் பெயரை தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி என அறிவித்தார் என்று கூறி பெருமிதப்பட்டார், மேலும் மயிலாடுதுறை அருகே துவங்கப்பட்ட என்பிகேஆர்ஆர் சர்க்கரை ஆலை மற்றும் தேரிழந்தூர் கம்பர்கோட்டம் போன்ற பல்வேறு சாதனைகளை நினைவுகூர்ந்தனர். இந்த விழாவில் விவசாயி சங்க புது செயலாளர் ஆறுபாதி கல்யாணம், தமிழ்ச்சங்க தலைவர் ஜெனிபர், ஐஸ்வர்யா ஜெயக்குமார் ஏவிசி கல்லூரி ஆங்கில பேராசிரியர்
Next Story





