எஸ்பிபிஐ கட்சியிடம் நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு
மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது ரஃபி தலைமையில் நடைபெற்றது. சகோதரத்துவத்தையும், சமூக ஒற்றுமையும் போதிக்கும் வகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில், இஸ்லாமிய, கிறிஸ்வத மற்றும் இந்து மதத்தினர் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், விசிக மாவட்ட செயலாளர் மோகன்குமார், தேமுதிக நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ரமலானின் மகத்துவம் மற்றும் தமிழகத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஒற்றுமையை குறித்து பேசினர். தொடர்ந்து, இப்தார் நோன்பு திறக்கப்பட்டது. பின்னர் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
Next Story




