தமிழக அரசு விவசாயிகளுக்கு அள்ளி கொடுக்கிறதா கிள்ளி கொடுக்கிறதா
. மயிலாடுதுறை மாவட்டத்துக்கான மார்ச் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விவசாயி இளம்பரிதி என்பவர் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறது. பெயரளவுக்கு கிள்ளியா கொடுக்கிறது? அள்ளிக் கொடுக்கிறது அதிகாரிகள் சரிவர செயல் படவேண்டும் என்றார். அடுத்த வினாடி கூட்டத்தில் அமர்ந்திருந்த சில விவசாயிகள் கோபத்துடன் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆட்சியில் ஒவ்வொரு பருவத்துக்கும் சராசரியாக ரூ.50,000 விவசாயிகள் நஷ்டம் அடைகிறோம் என்றார். அரசு கொடுப்பதை இல்லை என கூறாதீர் என்றார் விவசாயி இளம்பரிதி . மேலும் சில விவசாயிகள் எப்படி நீங்கள் இந்த அரசாங்கம் அள்ளிக் கொடுக்கிறது என பேசலாம் என கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. அவர்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சமாதானப்படுத்தினர்.
Next Story







