தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம்
. மயிலாடுதுறை காவேரி நகரில் அழகுஜோதி அகாடமி வித்யாலயா என்ற பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை மாநில கல்வி பாடத்திட்டத்தின் (பிரைமரி அண்ட் நர்சரி) அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடத்தப்படுகிறது. இங்கு படித்தவர்களை ஆறாம் வகுப்பிற்கு இதே நிறுவனம் மயிலாடுதுறை அருகே மேலையூரில் நடத்தும் அழகு ஜோதி அகாடமி மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இப்பள்ளியிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ்படித்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இதுவரை மருத்துவர்கள் இன்ஜினியர்கள் போன்ற உயர் படிப்பு முடித்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் உள்ள பள்ளியில் சிபிஎஸ்சி பாடம் நடத்த ப்படுகிறது, அதற்கான கல்வி கட்டணம் வாங்கப்படுகிறது, ஆனால் சிபிஎஸ்சி படிப்பதற்கான உரிமம் ஏன் வாங்கவில்லை என்று பிரச்சனையை ஒரு சில பெற்றோர்கள் எழுப்பினர். இதுகுறித்து நிர்வாகம் தரப்பில், மாணவர்கள் எந்த விதத்திலும் இதுவரை பாதிக்கப்பட்டதில்லை என்றும் அனைத்து மாணவர்களையும் மேலையூரில் தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம் என்று கூறியதில் திருப்தி அடையாத பெற்றோர் இரவு 7.30 மணி அளவில் பள்ளிக்கு முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. போராட்டம் நடத்தியவர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் சனிக்கிழமையன்று மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்
Next Story






