தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆரன்சிங் ஆய்வு

X
மயிலாடுதுறை ரயில் நிலைய சந்திப்பில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா ஆகியோர் மயிலாடுதுறை ரயில் நிலைய சந்திப்பில் அம்ரித் பாரத் பராமரிப்பு பணி மற்றும் ரயில்வே பராமரிப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் பராமரிப்பு பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் நடைமேடையில் அமைக்கப்படும் டைல்ஸ் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் விமர்சித்து பேசியிருந்தார், இந்த நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று ஆய்வு நடைபெற்றது. இந்நிலையில் ஆய்வை முடித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வரை நடைபெறுகின்ற ரயில்வே பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். ரயில் நிலையத்திற்கு வெளியே பெரிய தூண்கள் பைபர் உயர் ரக பிளாஸ்டிகால் தயார் செய்யப்பட்டிருக்கிறது இது தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது கான்கிரீட் தூணுக்கு மாற்று யோசனையாக இந்த இடத்தை பயன்படுத்தி வருகிறோம் என்றார். மேலும் இன்டர் சிட்டி குறித்து கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் தெரிவித்து இருக்கிறார் இனி வரும் நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். விழுப்புரம் தஞ்சை இடையில் ஆன ரயில் பாதையை இரு வழி பாதையாக மாற்ற, விரைவாக வேலைகளை மேற்கொண்டு வருகிறோம் மிக விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார். மேலும் பேரளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் புதிய அகல ரயில் பாதையில், தற்போது சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருக்கிறது மிக விரைவில் புதிய ரயில் சேவை தொடங்கப்படுவதை அறிவிப்போம் என்று கூறினார். தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் ரயில் நிலையத்தில் செயல்படாத குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஐந்து நடைமேடையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் தற்போது பராமரிப்பு பணி நடைபெறுவதனால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது ஏற்கனவே பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை சரி செய்து முழுமையான பராமரிப்பு பணிக்கு பின்பு சிசிடிவி கேமராக்களை பொருத்துவோம் என்று கூறினார்
Next Story

