மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கைதை கண்டித்து மயிலாடுதுறையில் மறியல் போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் நில மீட்பு உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாடு காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 40 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story




