மயிலாடுதுறை எம்பி சுதா மயிலாடுது ரயில் நிலையத்தில் பேட்டி
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரிபாரத் திட்ட செயல்பாடுகள் குறித்தஆய்வின் போதுகலந்துகொண்ட மயிலாடுதுறை எம்பி. சுதா செய்தியாளர்களை சந்தித்தபோது, நான் நாடாளமன்றத்தில் பேசினேன் ரயில்வேதுறை அமைச்சர் தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் கூறியதன்பேரில் அவர்கள் நேரில் வந்து எக்ஸ்லேட்டர், மற்றும் நடைபாதை குறித்து குற்றச்சாட்டிற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார், நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டார். பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது, வரும் காலத்தில் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன், உபியில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு செல்லும் ரயிலை வாரத்திற்கு 5 நாட்கள் வழங்கினார்கள், நல்ல ரெவின்யூ வருவதால் 7 நாட்களாக நீடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், சீர்காழியில் அந்தோத்யா ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் கோவிட் சமயத்தில் சென்ற அனைத்து ரயில்களும் இயக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம், பெரியவர்கள் சிரமப்படுவதால் எக்ஸ்லவேட்டர் பணி செப்டம்பர் மாதத்தில் செய்து முடிக்கப்படும் என்று பொதுமேலாளர் தெரிவித்துள்ளார், ரயில் நிலையத்தில் பேருந்து உள்ளே சென்று திரும்புவதற்கு வசதியாக பொதுக்கழிப்பறையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது மாறாக ரயில் நிலைய வளாகத்தில் கட்டணக்கழிப்பறை கட்டப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாப்படுகை மற்றும் நீடூர் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து மாநில அரசு அதற்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது விரைவில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதும் மேம்பாலப்பணிகள் துவங்கும் என்றார். கோயில் நகரம் என்பதால் வரும் பகத்ர்கள் வசதிக்காக தங்கும் அறைகள் அதிகமாகத் தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு பொதுமேலாளர்கூறுகையில்,ஏற்கனவே 2 அறைகள் உள்ளன, அவைகள் சரியாகப் பயன்படுத்திகொள்வதில்லை, மேலும் இந்த பாரத்அம்ரித் திட்டத்தின்கீழ் 20 தங்கும் அறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..
Next Story






