பாஜகவினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

தமிழக முதலமைச்சரைக் கண்டித்து மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்:-
தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் அதிகளவில் தொடர்வதாகவும், அதனை மடைமாற்ற தொகுதி சீரமைப்பு என்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும், கர்நாடகா, கேரளா மாநில தலைவர்களுக்கு தமிழக முதலமைச்சர் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதாகவும், தமிழக முதலமைச்சரைக் கண்டித்து பாஜகவினர் அவரவர் வீடுகளின் முன்பு நின்று காலை 10 மணிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு நாஞ்சில்நாட்டில் உள்ள அவரது வீடு முன்பு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தார். மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன் அவரது கட்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜிகுருக்கள், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தினர்.
Next Story