விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு விழா
. மயிலாடுதுறை மாவட்டம் தனியார் ஹோட்டலில் இஃப்தார் நிகழ்ச்சி இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பாக மாநிலத் துணைச் செயலாளர் ரியாஸ்கான் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்றனர் இந்த இஃப்தார் நிகழ்ச்சி 18 ஆம் ஆண்டாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சபீர் அகமது, ரிபாயுதின், சர்மூதின், ரபீக், வாஷித், சலீம், தொகுதி துணை செயலாளர் தமிழ்தென்றல், மண்டல செயலாளர் அறிவழகன், உமா காந்தன், செங்குட்டுவன், பெருமழுதி, தேவேந்திரன், ஆசைவலைவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், ரமலானின் மகத்துவம் மற்றும் தமிழகத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஒற்றுமையை குறித்து இப்தார் நோன்பு திறக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
Next Story




