தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும் வகையில் மணல்மேடு கடைவீதியில் தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் மனோகர் தலைமையில் நீர்மோர்பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் குட்டி.கோபிநாத் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், ரோஸ் மில்க் ஜூஸ் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அது மட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அரசு பேருந்தில் ஏறி பயணிகளுக்கும் நீர்மோர், ரோஸ்மில்க், தர்பூசணிகளையும் வழங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சுதாகர், வினோதினி, ராஜேஷ், பிரவின் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மணிகண்டன், ஜீவா, விக்னேஸ்வரன், சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






