பெட்ரோல் பைக் திடீர்தீப்பிடித்து எரிந்து நாசம்

மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வீரப்பன், இவர் தனது பெட்ரோல் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பற்றி எரிந்தது
மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வீரப்பன் இவர் மயிலாடுதுறையிலிருந்து வீட்டுக்கு ஹோண்டா இருசக்கர வாகனத்தில் சென்றபோது கள்ளிக்காடு என்ற இடத்தில் அவரது வாகனம் திடீரென புகையத் தொடங்கியது. வீரப்பன் வாகனத்தை போட்டுவிட்டு தள்ளி சென்றார். சில வினாடிகளில் வண்டி தீப்பிடித்து முழுவதுமாக எரிந்துவிட்டது. பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்த நிலையில் அதற்குள் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. .
Next Story