கலைச்சங்கமம் நடத்திய கிராமிய கலை நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் நடைபெற்ற கலைச்சங்கமம் விழாவில் பொம்மலாட்டம், சாமியாட்டம், கழியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது
:- தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு மார்ச் 24 முதல் 30ஆம்தேதி வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலைச் சங்கம விழா நடைபெற்றது. தேவார இன்னிசை கச்சேரியுடன் துவங்கிய நிகழ்ச்சியில் கலைமாமணி சோமசுந்தரத்தின் கணநாதர் பொம்மை நாடக சபாவின் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், பார்வையாளர்களைக் கவர்ந்த கழியாட்டம், கலைத்தாய் சிவசக்தி நடன கலைக்குழுவினரின் சாமி ஆட்டம், ராமர் சீதா சீமந்த வைபோக நாடகம், சோழன் பிளாஸ்ட் நாசிக் மேலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தங்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை  மகிழ்வித்தனர். இந்த விழாவை கலைமாமணி என் சிவாஜி ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் விஜயா தாயன்பன் கிங் பைசல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story