இன்று மாலை மயிலாடுதுறைக்கு ஆளுநர் ஆர் என் ரவி வருகை

இன்று மாலை மயிலாடுதுறைக்கு ஆளுநர் ஆர் என் ரவி வருகை
X
தேரழந்தூருக்கு இன்று தமிழக ஆளுநர் வருகை- கம்பராமாயண விழாவில் பங்கேற்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூரில் இன்று நடைபெறும் கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின், தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கம்பராமாயண விழா மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்.6-ம் தேதி வரை ஒரு வார காலம், கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரில் கம்பராமாயண சொற்பொழிவுகள், கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இதையொட்டி தேரழுந்தூர் கம்பர் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்கி நடைபெறும், கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கம்பராமாயண விழாவை தொடங்கி வைக்கிறார். முன்னதாக தேரழுந்தூரில் கம்பர் வாழ்ந்த இடமான, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கம்பர்மேட்டில் இந்திய தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை ஆளுநர் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆளுநர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக தேரழுந்தூர் வருகிறார்.
Next Story