பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்-வின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மாலை நேரத்தில் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
:- பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனுவாக எழுதி எடுத்துச் சென்றபோது, அதனை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பரிசீலனை செய்யதாதோடு, கோரிக்கை மனு கசக்கி குப்பைக்கூடையில் வீசி, மனு கொடுக்கச் சென்ற அலுவலர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்-வின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள் இன்று பிற்பகல் 4.45 மணிக்கு ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய 5 வட்டாரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அலுவலர்கள் கலந்துகொண்டு, கண்டனம் தெரிவித்து பேசினர்.
Next Story