தலையில் சுமக்கும் தேர்
மயிலாடுதுறை அருகே மங்கை நல்லூர் கீரனூரில் பழமையான அருள்மிகு அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக் கோயில்களில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், எல்லை தேர்பவனி, தேர் திருவிழா, தீமிதி ஆகிய உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உற்சவம் கடந்தமாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் நூதன முறையில் தேரினை தலையில் தூக்கி கொண்டு 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஊர் எல்லையான வயல் பகுதியை சுற்றிவந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் ஒற்றுமையை மேம்படுத்தவும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story






