வழுவூர் வீரட்டானேஸ்வரர் ஆலய கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் சிவனின் வீர திருவிளையாடல்களில் உள்ள எட்டு தலங்களில் இது ஆறாவது தலைப்பாகும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது
. மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் என்பது தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக  ஆபிராச வேள்வி நடத்தி, அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட,  சிவபெருமான் அந்த யானையை அழித்து, அதன் தோலை போர்த்தி கொண்டு வீரச்செயல் நிகழ்ந்த தலம் வழுவூர்.  அட்டவீரட்ட தலங்களில் 6-வது தலமான இக்கோயிலில் சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார்.  இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயிலின்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 கால யாகசாலை பூஜைகள் 1ஆம் தொடங்கியது. இன்று காலையில் நடைபெற்ற 6ஆம் கால யாகசாலை பூஜையில் தருமபுர ஆதீனம் க்ஷீலக்ஷீ மாசிலாமணி பரமாச்சரிய சுவாமிகள் பங்கேற்றார்.   யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு சன்னதியில் வலம் வந்து கும்பங்களை அடைந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது பல்லாயிரக்கணக்கானோர்  தரிசனம் செய்தனர். கலசங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்ட பொழுது ஹெலிகாப்டர் மூலம் கலசங்கள்மீது மலர் தூவப்பட்டது . மேலும் புனித நீர் ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பினை மயிலாடுதுறை காவல் துறையினர் செய்திருந்தனர்.
Next Story