புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து
. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தூர் கிராமத்தில் இருந்து கடக்கம், கிளியனூர் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்டு வந்த பொதுப்பேருந்து சேவை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் முத்தூர் கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள் கடக்கண் கிராமம் வரை நடந்து சென்று அங்கிருந்து மயிலாடுதுறைக்கு அரசுப்பேருந்து மூலம் சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக முத்தூரிலிருந்து மினி பஸ் சேவை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகளிர் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் முத்தூர் கிராமத்தில் இருந்து மீண்டும் பொது பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு பேருந்து சேவையை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இதில் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






