கம்பர் பிறந்த இடத்தில் கம்பராமாயண விழாநிறைவு

மயிலாடுதுறைதேரழுந்தூரில் ஏப்.6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற கம்பராமாயண விழா நிறைவுநேற்றுடன் நிறைவு பெற்றது
: தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ள தேரழந்தூரில் உள்ள கம்பர் கோட்டத்தில் கம்பராமாயண விழா மார்ச் 30-ஆம் தேதி தமிழக ஆளைநர் துவங்கி வைத்தார் ஏப்.6-ஆம் தேதிவரை நடத்தப்பட்டது. இதில், கம்பராமாயண சொற்பொழிவுகள், தெருக்கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், நாடகம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள்; நடத்தப்பட்டன. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கலாச்சார அமைச்சக செயலர் அருணிஷ் சௌலா ஐஏஎஸ் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு மற்றும் விருதினை வழங்கிப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பர்மேட்டில் நாம் கூடியுள்ளோம். இங்கு சோழர்களின் அற்புதமான கோயில்களில் சித்தரிக்கப்பட்டுள்ள ராமாயணக் காட்சிகளைக் கொண்ட ஒரு கண்காட்சியைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த கண்காட்சியில், இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளமான கலாச்சார மரபை மேலும் கொண்டாடவும் பாதுகாக்கவும் விரைவில் ஒரு அனுபவ அருங்காட்சியகம் இங்கு நிறுவப்படும். ஸ்ரீரங்கம் கோயிலில் கம்பராமாயணத்தின் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் மாநிலம் முழுவதும் 20 கோயில்களில் இந்தக் காவியம் வாசிக்கப்பட்டுள்ளது. ராம நவமியின் புனிதமான நாளில் கம்பராமாயணம் கொண்டாடப்படுவதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார். முன்னதாக, விழாவில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் காணொலி வாயிலாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
Next Story