விபத்தில் உயிருக்கு போராடும் தந்தைக்காக மாணவன் மனு
. மயிலாடுதுறை திருமணஞ்சேரியை சுதாகர்(45). கடந்த ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் படுகாயமடைந்து , தஞ்சாவூரில் உள்ள தனியார் (காமாட்சி) மருத்துவமனையில் ரூ.32 லட்சம்வரை செலவு செய்துள்ளனர். இருந்த வீடு நிலங்களை விற்று சிகிச்சை செய்தும் மீண்டும் தொகை தேவைப்படுவதால் வீட்டுக்கு ஒரே ஆதாரமாக இருந்த சுதாகர் விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி தவிக்கும் குடும்பத்தினர் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க பணவசதியின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், குத்துச்சண்டை போட்டிகளில் தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ள, குத்தாலம் அரசு மாதிரிப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் சுதாகரின் மகன் இன்பத்தமிழன், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க் கூட்டத்துக்கு, தான் வென்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தந்தை விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், வாழ்ந்த வீட்டையும் அடமானம் வைத்துவிட்டு தாத்தா வீட்டில் வசிப்பதாகவும், தனது படிப்பே கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தனது தந்தையை தனியார் மருத்துமனையில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துறைசார்ந்த அதிகாரிகளை அழைத்து மாணவனின் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்து தர உத்தரவிட்டார்.
Next Story





