காவல் நிலையம் முன்பு வாகன விபத்தில் இரண்டு வயது சிறுவன் பலி

செம்பனார்கோவில் காவல்நிலையம் எதிரே வாகன விபத்தில் 2 வயது ஆண் குழந்தை பலி   வாகனத்தை செல்பொனில் படம்பிடித்த பாமக ஒன்றிய செயலாளாரை எஸ்.ஐ தாக்கியதாக குற்றம்சாட்டி பாமகவினர் சாலைமறியல் போராட்டம்
.   மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல்நிலையம் எதிர் புரத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செம்பனார்கோவில்  ரஜினி என்பவர் டாட்டா ஏசி வாகனத்தில் உணவு எடுத்து வந்து மாலை 6 மணிக்கு வழங்கி உள்ளார்.  உணவு வழங்கிவிட்டு  டாட்டா ஏசி வாகனம் முன்பு  விஜய் என்பவரின் ஒன்றரை வயது  ஆண்குழந்தை ராகவன்மீதுஏறி இறங்கியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டது.  செம்பனார்கோவில் போலீசார் டாட்டா ஏசி வாகனத்தை கைப்பற்றி  செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் நிறுத்தினர்.  அப்போது இச்சம்பவத்தை பார்த்த  செம்பனார்கொவில் பாமக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் காவல் நிலையத்தில்  இருந்த டாட்டா ஏசி வாகனத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.   இதனைக்கண்ட எஸ்.ஐ சந்தோஷ்குமார்  பாமக  செந்தில்குமாரை ஏன்போட்டோ எடுக்கிறாய் என்று கேட்டபோது வாக்கவாதம் ஏற்பட்டதில் செந்தில்குமாரை சட்டையை பிடித்து இழுத்து சென்று தாக்கியதாக குற்றம் சாட்டிய நிலையில் காவல்நிலையம் முன்பு குவிந்தனர்.  பாமகவினரிடம் காவல் ஆய்வாளர் கருணாகரன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. தொடர்ந்து பாமகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலைமறியலை கைவிட்டனர். போலீஸ் எஸ்.ஐ வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து பாமகவினர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story