வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து ஐந்து மணி நேரம் பொதுக்கூட்டம்
:- வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. உலமா சபை மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார், பூம்புகார் திமுக எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3000 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். இதில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர், உலமா சபை நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து உரையாற்றினர். மாலை 4 மணி அளவில் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை நீடித்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் இருளில் தங்கள் செல்போன் டார்ச்சை மிளிரவிட்டு விட்டு மத்திய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் முத்தலாக் தடை சட்டம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றின் வரிசையில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் அச்சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்சக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






