தருமை ஆதீனத்திடம் பாடகர் பாலமுருகன்
. மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனம் திருமடம் உள்ளது. இங்கு திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் தனது மகள் பிரதக்க்ஷனாவுடன் வருகை புரிந்தார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகளை சந்தித்து தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு ஆசி பெற்றார். பின்னர் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் விநாயகர், முருகர்,சிவபுராணம் பாடல்களை மணமுருக பாடினார். பின்னனி பாடகர் வேல்முருகனின் பக்தி பாடலை தருமபுரம் ஆதீனம் அமைதியாக, ஆர்வமாக கேட்டார் தொடர்ந்து பாடகர் வேல்முருகனுக்கு தருமபுரம் ஆதீனம் பிரசாதங்களை வழங்கினார்.
Next Story




