விவசாயத்துறையினர் விவசாயிகளிடம் ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலநிலை மாற்றத்துக்கான விவசாய உத்திகள் குறித்து விவசாயிகளுடனான கருத்தரங்கம்:
காலநிலை மாற்றத்தால் மயிலாடுதுறை மாவட்டம் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்தது. இந்நிலையில், விவசாயிகளுக்கு காலநிலை மாற்றத்துக்கான விவசாய உத்திகள் குறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சேகர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய விவசாய உத்திகள், காலநிலை மாற்றத்திற்கேற்ப வேளாண் பொருள்களை சந்தைப்படுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் பங்கேற்று, டெல்டா மாவட்டத்திற்கான காலநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண் உத்திகள், காலநிலை மாற்றத்திற்கேற்ப மண்ணில் ஏற்படும் உயிர்மவளங்கள் மாற்றம் மற்றும் உயிர்ம வளங்களை நிர்வகிப்பதற்கான உத்திகள், காலநிலை மாற்றத்திற்கேற்ற மண்வளம் மற்றும் அங்கக சத்துக்கள் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில்;, ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Next Story