டிராக்டரில் பயணம் செய்த பிளஸ் ஒன் மாணவன் விபத்தில் பலி

மயிலாடுதுறை அருகே  பெரம்பூர் வடக்கு தெருவிலிருந்து எலந்தகுடியில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு டிராக்டர் ஒன்றில் எம்சாண்ட் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. டிராக்டரை கீழப்பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த ரகுநாதன் மகன் பிரவீன் (24) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். டிராக்டரில் இடது புறம் இருக்கையில் பெரம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த சிறுவன் (செல்வராஜ் மகன் திவாகரன் (16)) அமர்ந்திருந்து உள்ளார்.    நெய்குப்பை அருகில் சாலையில் வேகமாக சென்ற டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் தலைக்குப்பிர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரின் உள்ளே சிக்கி படுகாயம் அடைந்த சிறுவன் திவாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் தப்பிய டிரைவர் பிரவினை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிவிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பூர் போலீசார் உயிரிழந்த திவாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்துபோன திவாகரன் +1 தேர்வு எழுதிய மாணவன், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story