அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து புரட்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
18-4-25 மயிலாடுதுறையில் இந்து புரட்சி முன்னணி சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்:- அமைச்சர் பொன்முடி இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் திருநீறு, திருமண் குறித்து பெண்ணியத்துடன் ஆபாசமாக தொடர்பு படுத்தி சர்ச்சைக்கு உரிய வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக இவர் மீது ஏற்கனவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் பெண்ணியத்துக்கு எதிரான கொச்சை பேச்சை கண்டித்து மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு இந்து புரட்சி முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோதிகுமரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு அமைச்சர் பொன்முடியை பதவி விலக வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
Next Story




