ஓடும் ரயிலில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் பறிமுதல்
புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயில் (வண்டி எண்: 20849) மயிலாடுதுறைக்கு வந்தபோது மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி மற்றும் ஜெயா ஆகியோர் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் . பயணிகளின் இருக்கைக்கீழ் கிடந்த பையை சோதனை செய்ததில் அதில் 10 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 4.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இவற்றைக் கடத்தி வந்த மர்ம நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். கஞ்சா மற்றும் குட்கா பொருள்களை போலீசார் கைப்பற்றி மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனிடம் ஒப்படைத்தனர்.
Next Story




