ஆர்.எஸ்.எஸ்.அஜந்தாவை செயல்படுத்துகிறது பாஜக அரசு
. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மதச்சார்பற்ற மக்கள் முன்னணி சார்பில் வக்ஃபுவாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மண் தன்னுரிமை இயக்க தலைவர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றும் பொழுது, வக்ஃப்பு திருத்த மசோதா ஒரு திட்டத்தோடு கொண்டுவரப்பட்டது, இந்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதுவும் இருக்கக் கூடாது, அவர்களுக்கு பொருளாதாரமாக இருப்பது வக்ஃபு சொத்துக்கள், அது இருக்கக்கூடாது பறிமுதல் செய்ய வேண்டும். அழிக்கப்பட வேண்டியவர்களுக்கு எதற்கு சொத்து, எஞ்சி வாழ வேண்டும் என்றால் மதம் மாறிக்கொள் என்கிறான், சூத்திரர்களாக இருக்க எங்களை அழைக்கிறான், பஞ்சமர்களாக இருக்க எங்களை அழைக்கிறான். இஸ்லாமியர்களை மதம் மாறி சூத்திரர்களாக மாறச் சொல்கிறான், ஏன் என்று கேட்டால், இந்துராஷ்டிரம், ஆர். எஸ். எஸ். 1925 இல் துவங்கப்பட்டு 2025 இல் 100 ஆண்டாகிவிட்டது அவசரமாக இந்து ராஷ்டிரம் படைக்கப்பட வேண்டும் என முடுக்கி விட்டுள்ளார்கள் எல்லா இடங்களிலும் அதற்கான வேலை நடந்து கொண்டுள்ளது. சி ஐ ஏ வை அறிவித்து குடியுரிமையை எடுத்துவிட்டு சொத்துக்களை பறிப்பது ஒரு வகை . வக்ஃபு அமைப்புகளுக்கே சொத்து இல்லாமல் அடிப்பது மற்றொரு வகை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஆர் எஸ் எஸ் அமைப்பின் பத்திரிகையான ஆர்கனைசரில் வந்துள்ள கட்டுரையில் கிறிஸ்தவர்களுக்கு தேவாலயங்களுக்கு கூடுதலாக சொத்து இருக்கிறது அதற்கு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என எழுதியிருக்கிறான் சிறுபான்மையினரான கிறித்தவர்கள் என அனைவரும் ஒன்றுகூடவேண்டும், வட மாநிலங்களில் மதவெறி ஊட்டி வைத்துள்ளான், இங்கே அனைவரும் ஒன்று கூடியிருந்தால்தான் நாம் வெல்ல முடியும். தாமரை மலரக்கூடாது குளத்தில் வேண்டும் என்றால் மலரட்டும் ஆனால் கொள்கையில் மலரவேக்கூடாது என கண்டன உரையாற்றினார். இந்த அமைப்பில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்௭ விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் பங்கேற்றன. கூட்ட முடிவில் அத்திகுர் ரகுமான் நன்றி கூறினார்.
Next Story




