கம்பர் காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கம்பர் காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா
X
குத்தாலம் அருகே தேரழந்தூரில் ஸ்ரீ ஏரிக்கரை மாரியம்மன் ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா. 16 அடி வாயில் அழகு குத்தி தீ மிதித்த காட்சி அனைவரையும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் மேலையூர் கிராமத்தில் புகழ்வாய்ந்த ஏரிக்கரை மாரியம்மன் ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களின் தீமிதி திருவிழா கடந்த 16ஆம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பூத்தட்டு வீதி உலா, பூச்சொரிதல், சக்தி கரகம் அம்பாள் வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் ஆணைகுள கரையிலிருந்து சக்தி கரகம் முன் செல்ல 16 அடி அலகு காவடி, கூண்டு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் வான வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.மேலும் சிறப்பு அலங்காரத்தில் தீ குண்டத்தின் எதிரே பக்தர்களுக்கு அருள் பாலித்த மாரியம்மன் காளியம்மனுக்கு ஆலய அர்ச்சகர் ராஜா மணிகண்டன் மகா தீபாராதனை காண்பித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தேரழுந்தூர் கிராமவாசிகள்,கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story