வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தகுடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாவட்ட செயற்குழு துரைராஜ், வெண்ணிலா வைரவன், ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
Next Story




