தரங்கம்பாடியில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு அமைதி ஊர்வலம்.

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி சடங்கை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை அருகே அமைந்துள்ள மறைதிரு, மிஷினரி சீகன்பால்கு சிலை முகப்பில் இருந்து தரங்கை பங்கு தந்தை அருளானந்து துவக்க ஜெபத்துடன் மௌன ஊர்வலம் புறப்பட்டது
ஊர்வலம் புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக புனித செபமாலை அன்னை ஆலயத்தில் அனைவரும் மெழுகு வர்த்திகளை ஏந்தி மலர்கள் தூவி இறுதி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வுக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும், உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினரும், கிறிஸ்துவ நல்லெண்ணெ இயக்கத்தின் மத்திய மண்டல செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ், மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க தலைவர் சகாயராஜ், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், பேரூர் கழக திமுக செயலாளர் முத்துராஜா, திருக்குவளை அ.ஜோசப், மாநில மகளிரனி ஈடித் செலின், செல்வராஜ் பெர்னான்டோ, கரிகாலன், ஜேக்கப், சுதாகர், ஒருங்கினைத்தனர். இந் நிகழ்வில் பங்கேற்பாளர்களாக நாகை மாவட்ட கிறிஸ்துவ நல்லெண்ணெ இயக்க மாவட்ட செயலாளர் மாறன், மாவட்ட பொருளாளர் பயாஸ் வில்சன், தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள், தமிழக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும், உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினரும், கிறிஸ்துவ நல்லெண்ணெ இயக்க மத்திய மண்டல செயலாளர் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.
Next Story