குத்தாலத்தில் இந்து அறநிலையத்துறை பொதுமக்கள் அடிக்கடி கலாட்டா

காவல்துறை பாதுகாப்பை புறக்கணித்து ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வர்த்தகர்கள் இடையே கடும் மோதல், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு, சாலை மறியல் போராட்டம்
. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ரூ. 12 லட்சத்திற்கு மேல் பாக்கியுள்ளதாக கூறி கடையை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முயற்சித்தனர், வாடகையில் குளறுபடி குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர், காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் திடீரெனறு பிரச்சனைக்குரிய கடையை இந்து அறநிலையத்துயினர் சீல் வைக்க முயற்சி செய்தனர். ஆர்டிஓ விசாரணையில் இருக்கும் பொழுது எப்படி சீல் வைக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யு மற்றும் பல்வேறு அமைப்பினர் அதிகாரிகளை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பியபொழுது, மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கடுமையாக கைகளால் தாக்கி கொண்டனர். தொடர்ந்து அங்கு இருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இந்து அறநிலையத்துறையினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் தனித்தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் இந்து அறநிலையத்துறையினர் கேட்காமல் சீல்வைக்க முற்பட்டது தெரியவந்தது. போலீசார் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி திருபபிஅனுப்பி வைத்தனர் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது, இச்சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story