வங்கியில் செல்போன் திருடும் முதியவர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட (SBI) வங்கிக்கு வருகை புரிந்த வயதான நபர் வங்கி ஊழியர்களின் மேஜையில் வைத்திருக்கும் செல்போன்களை நோட்மிட்டு அதன் அருகே உள்ளே நாற்காலியில் வாடிக்கையாளர் போல அமர்ந்து யாரும் இல்லாமல் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி இரண்டு செல்போன்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வங்கி துணை மேலாளர்கள் ஹேமா, கயல்விழி ஆகியோர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் போலீசார் வழக்குபதிவு செய்து செல்போன் திருடனை தேடி வருகின்றனர்
Next Story



