அரை மணி நேரம் பலத்த மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியத்திற்குமேல் மயிலாடுதுறையில் பரவலாக திடிரென மழை பெய்யத் தொடங்கியது. 30 நிமிடம் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் வில்லியநல்லூர், குத்தாலம், நீடுர், பட்டவர்த்தி, சித்தர்காடு, தருமபுரம், மன்னம்பந்தல் உள்ளிட்ட மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story





