அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற இருவர் பலி

தரங்கம்பாடி அருகே பைக் மீது  அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஸ்டார் போட் கம்பெனி எனும் தனியார் படகு தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவை சேர்ந்த சந்தோஷ் குமார் ( 37) என்பவரும், செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் பகுதியை சேர்ந்த சங்கர் (40) என்பவரும் பெயண்டராக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சந்தோஷ் குமார், சங்கர் ஆகிய இருவரும் இன்று வேலைக்கு செல்லாமல் இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து  தரங்கம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மயிலாடுதுறை மாவட்ட எல்லையான நண்டலாறு சோதனை சாவடி அருகே  செல்லும்போது  அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொறையார் போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story