நாற்று நட்ட வயல் நாசம் டிராக்டர் பறிமுதல்

குத்தாலம் அருகே நடவு செய்த பயிரை டிராக்டர் விட்டு அழித்த அதிமுக பிரமுகரின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன் (70). இவர் தொழுதலாங்குடியில் தலைமுறை தலைமுறையாக புதுக்கோட்டையை சேர்ந்த தமது உறவினர் நிலத்தையும் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் சாகுபடி பார்த்து வரும் நிலத்தில் 5.25 ஏக்கரை தொழுதலாங் குடியை சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வைத்தியநாதன் என்பவர் பத்திரப்பதிவு செய்துள்ளார் இது குறித்து அறிந்த சீனிவாசன், மயிலாடுதுறை நில அபகரிப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனிவாசன் தற்பொது குருவை சாகுபடி நடவு செய்துள்ளார்.  இன்று அதிகாலை அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் , தமது உழவடிக்கும் டிராக்டரை கொண்டு நடவு செய்த வயலை சேதப்படுத்தி,  ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து நட்ட பயிர்களை அழித்து நாசப்படுத்திவிட்டார்.  தொழுதாலங்குடி பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் நாற்று சேதப்படுத்தப்பட்ட வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடவடிக்கை கொடி முழக்கமிட்டனர்.  குத்தாலம் போலீசார் வைத்தியநாதனின் டிராக்டரை பரிந்துரை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story