ஆறு வாய்க்கால் தூர்வாரும் பணி ஒரு வாரத்தில் முடிவடைகிறது

காவிரிடெல்டா மாவட்டங்களில் மே 30ஆம் தேதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிடும் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை முதன்மைச் செயலர் ஜெயகாந்தன் மயிலாடுதுறையில் பேட்டி
மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்படஉள்ளது,  தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தங்குதடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ள காலங்களில் விரைவில் வெள்ளநீர் வடியவும் ஏதுவாக நடப்பு ஆண்டில் தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 80 எண்ணிக்கையில் 965.65 கி.மீ நீளத்திற்கு 1132.88 இலட்ச மதிப்பீட்டில் பணிகள் அறிவிக்கப்பட்டது.    மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள். வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 72 எண்ணிக்கையில் 926.25 கி.மீ நீளத்திற்கு ரூ.1075.10 இலட்ச மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மயிலாடுதுறை  அருகே குத்தாலம் தேரிழந்தூர்,   மகிமலையாறு,   நச்சினார்குடி. கத்திரிமூலை   வீரசோழன் ஆற்றிலிருந்து பிரியும் பல்லவன் வாய்க்காலில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் முதன்மை செயலாளர்  .ஜெயகாந்தன்,    ஆய்வு மேற்கொண்டார்.  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆணையின்படி நீர்வளத் துறையின் சார்பாக 12 டெல்டா மாவட்டங்களில் 5021 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு பொறியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.98 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதில் 3700 கிலோ மீட்டர் பணிகள் நேற்று வரை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஞ்சியுள்ள பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 860 பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உள்ளது. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.   காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே தூர்வாரும்பணிகள் முடிவடைய உள்ளதை விவசாயிகள் வரவேற்பதாக தெரிவித்தனர்.
Next Story