வேம்படி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே வேப்பங்குளம் கிராமத்தில் வேம்படி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது :-
. மயிலாடுதுறை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தில் பூச்சொரித்தல் மற்றும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது‌. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான 43 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.பின்பு ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் அலகு காவடி மற்றும் சக்தி கரகம் மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதி உலா மற்றும் அரிச்சந்திரன் நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றது.
Next Story