கன்னிய பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே வல்லம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள வல்லம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோவில் பழைய மாறாமல் திருபணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து சிவாச்சாரியார்களால் யாககுண்டங்கள் வளர்த்து நேற்று 24 ஆம் தேதி முதல் காலயாக சாலை பூஜை தொடங்கி இன்று இரண்டாம் காலயாகசால பூஜை நிறைவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் அழைப்பை ஏற்று செம்பனார்கோவில் காவல்துறையினர் கோவில் கல்வெட்டை திறந்து வைத்தனர்.
Next Story