செம்பனார்கோவிலில் காடுவெட்டி குரு நினைவு நாள்

X
. மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு வின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட காடுவெட்டி ஜெ.குரு வின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. செம்பை மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினர், சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி மௌன அஞ்சலி செலுத்தினர்.
Next Story

