மயிலாடுதுறையில் காடுவெட்டி குருவிற்கு நினைவஞ்சலி

மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு வின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் அனுசரிப்பு:-
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காடுவெட்டி ஜெ.குரு வின் உருவ படத்திற்கு பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாமக, வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஜே குருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி வீர வணக்க முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story