அங்காள பரமேஸ்வரி ஆலய பால்குட திருவிழா

செம்பனார்கோவில் அருகே உள்ள மஹாராஜபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு பால்குட திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே உள்ள மஹாராஜபுரம் கிராமத்தில் அருளபாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு பால்குட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. செம்பனார்கோவில் மேலமூக்கூட்டு ஸ்ரீ தாதா வினாயகர் ஆலயத்தில் இருந்து சக்தி கரகம் சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடாகியது மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் மேள வாத்தியங்கள் முழங்க காளி ஆட்டத்துடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story