இரண்டரை அடி உயர மாற்றுத் திறனாளி ஆடு லோன் கேட்டு மனு

ஆடு வளர்க்க லோன் கேட்ட ஆட்சியரக படிகளில் ஏறிய இரண்டரை அடி உயர மாற்றுத்திறனாளியிடம் இறங்கிவந்து மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை அருகே குத்தாலம் திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் இரண்டரை அடி உயர பாலாஜி 40 தமது ஒரு ஏக்கர் நிலத்தில் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட பிரதம மந்திரியின் கடனுதவி திட்டத்தில் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. கடன் பெற்றுத்தரகோரி மனு அளிக்க தமது நண்பருடன் வந்தார் அவரை கண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உடனடியாக தனது இருக்கையில் இருந்து கீழே இறங்கி, மாற்றுத்திறனாளி பாலாஜியிடம் அருகில் வந்து குறையை கேட்டு அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு டிக் லோன் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
Next Story