மயிலாடுதுறையில் மக்களைத் தேடி முதல்வர் டதிட்டம்த்தில் இரண்டு அமைச்சர்கள்
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட 3ஆம் கட்ட முகாமில் உயர்கல்விதுறை அமைச்சர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றுள்ளனர். பட்டமங்கலம், வெள்ளாலகரம், காளி, திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பார்வையிட்டு, உடனடி தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்டஆட்சியர் ஶ்ரீகாந்த், டிஆர்ஓ, தாசில்தார் உட்பட அரசு அனைத்துத்துறை உயர்மட்டஅதிகாரிகள் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அமைச்சர் கோவி. செழியன் கூறியது மக்கள் அரசாங்கத்தை நாடி செல்ல வேண்டுமென்ற நிலையை மாற்றி மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தில் மக்களை தேடி அரசு அதிகாரிகள் செல்கின்றனர் என்ற நிலையை ஏற்படுத்தி தந்த ஒப்பற்ற தலைவர் நம் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று புகழாரம் சூட்டினார்.
Next Story



