மயானத்தை மாற்ற விடாப்பிடியான போராட்டம்

மயான பிரச்னை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை  தலித் மக்கள் தரப்பில் 200-க்கு மேற்பட்டோர் குவிந்தனர்
.   தலித்குடியிருப்புக்கு அருகாமையில் மயானம் அமைந்துள்ளதால் தொடர்ந்து பல்வேறு பிரச்சினை எழுந்து வருவதால் மயானத்தை மாற்ற வேண்டும் என்று தலித் மக்கள் கோரிக்கை வைத்தனர். பாரம்பரியமாக உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டை மாற்றகூடாது என்று மாற்று சமூகத்தை மறுத்தனர். மயானத்திற்கான சுற்றுச்சுவர் மற்றும் கட்டுமான பணிகளை திடீரென்று செய்து வந்தனர்.  இதனால் இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.  இரண்டு தரப்பையும் அழைத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். சமூகத் தீர்விற்கான சாத்திய கூறுகள் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்த்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.  இருதரப்பாறும் அமைதியாக கலைந்து சென்றனர்.
Next Story