எலந்தங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி கிராமத்தில் புகழ்பெற்ற சீதளா மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 20-ம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்தன காப்பு, அன்னதானம் மற்றும் பால்காவடி திருவிழா உள்ளிட்டவை நடந்து முடிந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு இருந்த பக்தர்கள் அம்பாளுக்கு உகந்த மஞ்சள் உடை உடுத்தி சக்தி கரகம் முன் செல்ல எலந்தங்குடி மெயின் ரோடு சத்திரம் குளக்கரையிலிருந்து மேல வாத்தியங்கள் வானவேடிக்கைகள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் பக்தர் ஒருவர் கைக்குழுந்தையுடன் தீ மிதித்த காட்சி காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தது.பின்னர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை எலந்தங்குடி கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story





