மின்வாரியத்தை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஒன்றிய தலைவர் ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய மின் இணைப்புக்கு தேவையற்ற ஆவணங்கள் காரணம் காட்டி மனுவை நிராகரிப்பது, குடிமனை பட்டா இருந்தும் நீண்ட காலமாக மின் இணைப்பு கொடுக்க மறுப்பது, 2021 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டி அரசு சார்பில் பெயர் பட்டியல் வெளியிட்டும் இலவச மின் இணைப்பை கொடுக்காமல் இருப்பதை கண்டித்தும், ஆக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டுகொள்ளாமல் செயல்படும் உதவி மின் பொறியாளரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினார் மேலும் இவ்ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story




