குடிசை வீடுகளின் மின் இணைப்பு துண்டித்த அரசு அதிகாரிகள்
மயிலாடுதுறை அடுத்துள்ள மூவலூர் மகாதானபுரம் சோழன் நகரில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 15 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர், திடீரென்று ஆறு மாதத்திற்கு முன்பு நீர் நிலை புறம்போக்கில் குடியிருப்பு இருப்பதாகக் கூறி மின்வாரி துறையினர் வீடுகளுக்கானமின் இணைப்பை துண்டித்து விட்டனர். மின்சாரம் இல்லாமல் குடியிருப்பில் வசித்து வரும்குழந்தைகளும் முதியோர்களும் தவித்து வருகின்றனர் இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம்பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இரவு நேரத்தில் விஷப்பூச்சிகளால் தொந்தரவை அனுபவிக்க நேரிடுகிறது. குடியிருப்புப் பகுதி நீர் நிலை புறம்போக்கு என்பதால் மாற்று இடம் கிடைக்கும் வரை மின் இணைப்பு வழங்க கோரியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு துரைராஜ் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்துள்ளனர். இரண்டு தினங்களுக்குள் முடிவு தெரிவிப்பதாகவும் நீர் நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார் அதுவரை தங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story





