டெட்டும் பாஸ் பண்ணியாச்சு வயசும் ஓடியாச்சு டீச்சர் வேலை எங்கே

நியமனத்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற இடைநிலை ஆசிரியர்களை பணி நியமிக்ககோரி கூட்டமைப்பினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்    
2024ஆம் ஆண்டில் நியமனத்தேர்வி வெற்றிபெற்றவர்களை தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 15000 .பணியிடங்களை நிரப்பககோருதல் உட்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நியமனத்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற இடைநிலை ஆசிரிகள் கூட்டமைப்பினர் மனு ஒன்றை அளித்தனர்.  தொடர்ந்து 4 முறை நியமனத்தேர்வில் வெற்றிபெற்றும் பணி வழங்கப்படவில்லை, வயது 50க்கும்மேல் ஆகிறது என்று வேதனை தெரிவித்தனர்.      மேலும் அவர்கள் கூறுகையில், தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பணி நிரவல் முறையில் நியமனம் செவ்தை தடைசெய்து நியமனத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை கொண்டு நியமனம் செய்யவேண்டும் என்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஓர் ஆசிரியரை நியமிக்கவேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம்வகுப்புவரை உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் அரசுடமைஆக்கவேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்களை  மனுவில் தெரிவித்திருந்தனர்..இதுபோல் 38 மாவட்டங்களிலும் ஆட்சியரிடம் மனு அளிக்கின்றனர் என்று தங்களது கண்களை ரிப்பனால் கட்டிககொண்டு பேட்டி அளித்தனர். டெட்டும் எழுதி பாஸ் ஆச்சு வயசும் ஏறியாச்சு டீச்சர் வேலை மட்டும் வரல!
Next Story